விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே காவல்துறையினரை கேலி செய்யும் விதத்தில் டிக்-டாக் செய்து வீடியோ வெளியிட்டவர்களை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தியாகி இமானுவேல் குருபூஜைக்கு வந்திருந்தனர். அப்பொழுது நரிக்குடி அருகே காவல்துறையினரை கேலி செய்யும் விதத்தில் டிக்-டாக் செய்து வெளியிட்டனர். அந்த டிக்-டாக் ல் நாங்க தாறுமாறா வெட்டுவோம், கொலை கேசுல ஜெயிலுக்கும் போயிட்டு வருவோம் போன்ற பாடல் வரிகள் இடம்பெற்றன. அதற்கு இளைஞர்கள் அருகில் இருந்த காவலரை பார்த்தபடி முகபாவனைகளை செய்தனர்.
இதனை அறிந்த காவல்துறையினர் டிக்-டாக் ல் ஈடுபட்ட 6 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்,காரியாபட்டி அருகே கரிசல்குளத்தைச் சேர்ந்த வினித் , சந்தோஷ்குமார் , மற்றும் வேப்பங்குளத்தைச் சேர்ந்த மருது செல்வம், ராமகிருஷ்ண மூர்த்தி ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதனை அறிந்து மேலும் இருவர் தலைமறைவாகி உள்ளதால் அவர்களை காரியாபட்டி காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Discussion about this post