சென்னை திருவொற்றியூரில், லாரி ஓட்டுநரின் செல்போன் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற குற்றவாளியை பிடித்த காவலர்களை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டி, வெகுமதி வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் லால்குடி தாலுக்கா மேலத்தெருவை சேர்ந்த மருதையன் என்ற லாரி ஓட்டுனர், கடந்த 3-ம் தேதி சென்னை வந்தபோது, விடியற்காலை 3 மணி அளவில் அவருடைய செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனைக் கண்ட மருதையன் சத்தம் போட்டதால், அங்கு ரோந்து பணியில் இருந்த தலைமைக் காவலர் சரவணன் மற்றும் வாகன ஓட்டுனர் யோக பூபதி இருவரும்,
குற்றவாளியை விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர்.
இந்த நிலையில், இரவு ரோந்து பணியில் துரிதமாக செயல்பட்டு, குற்றவாளியை கைது செய்ததற்காக, காவலர்களை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.