தமிழக கேரள எல்லையை ஒட்டி உள்ள மாவட்டமான தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு தேனி மாவட்டம் குமுளி சோதனைச் சாவடி வழியாக
கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக உத்தமபாளையம் குடிமைப் பொருள்
வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் குமுளி
சோதனைச் சாவடிக்கு அருகில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டதுடன் வாகனத்
தணிக்கையிலும் ஈடுபட்டனர்.அப்போது குமுளி சோதனைச் சாவடி வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழகப் பகுதியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.
லாரியில் வந்த மூன்று பேரை காவல்துறையினர் விசாரித்த போது,அதில் ஒருவர் கேரள
மாநிலம் வாளையார் பகுதியைச் சேர்ந்த சான்பாட்ஷா மற்றும் மதுரை தெற்கு வெளியே சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவருடன் வந்த பாலசிங் என்பவர் தப்பி ஓடி விட்டார். தலா ஐம்பது கிலோ எடை கொண்ட மூடைகள் வீதம் 17 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டு லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்ட சான்பாட்ஷா மற்றும் சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பிடிபட்ட ரேஷன் அரிசியை தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழக
கிட்டங்கியில் ஒப்படைத்த போலீசார்,கைது செய்யப்பட்ட இருவரிடமும் தற்போது தீவிர
விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தப்பி ஓடிய பாலசிங் என்பவரையும் தீவிரமாக
தேடி வருகின்றனர்.
Discussion about this post