சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள சந்தைப்பட்டியில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
சந்தைப்பேட்டையில் முருகேசன் என்பவர் கடந்த பல ஆண்டுகளாக பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதில் அவரிடம் மருத்துவம் பார்த்து வந்த பலர் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து கூறியுள்ளனர். இதனையடுத்து சுகாதாரத் துறை சார்பில் தனிப்படை அமைத்து அவரிடம் மருத்துவம் பார்க்க செல்வது போல் சென்றனர். அப்போது ஊசி போட முயன்ற முருகேசனை தனிப்படையினர் கையும் களவுமாக பிடித்தனர். அவரது சான்றிதழை ஆய்வு செய்ததில் முறையாக மருத்துவம் படிக்காதவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, முருகேசனை காவல்துறையினர் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post