மேற்கு ஜெர்மன் நகரத்தில் உள்ள ஹெரனே என்கிற இடத்தில் ஒருவர் 20 விஷப்பாம்புக்கு மேல் தன்னுடைய வீட்டில் வைத்து வளர்த்துவந்தார். திடீரென்று ஒரு நாள் தன் வீட்டில் வளர்த்த நாகப்பாம்பு ஒன்று தப்பிவிட்டது. சுமார் 4.6 அடி நீளமுடைய அந்த விஷப்பாம்பு அதை வளர்ப்பவரின் வீட்டிலுள்ள படிக்கட்டில் நடமாடுவதை அங்குள்ள மக்கள் பார்த்து போலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் பிறகு விசாரணை நடத்தி வந்ததில் இன்னமும் அந்த பாம்பு அங்கு தான் இருக்கிறது.பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.அதனால் அங்குள்ள மக்கள் 30 பேர் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள்.
அந்த நாட்டின் விலங்கு நிபுணர்கள், அந்த வீட்டைச் சுற்றிலும் மாவைக் கொட்டி வைத்தும், ஒட்டும் நாடாக்களையும் ஆங்காங்கு ஒட்டி வைத்தும் அந்த பாம்பின் நடமாட்டத்தை கண்டறிய முயற்சி செய்து வருகிறார்கள். அதன் பிறகு அதிகாரிகள் பாம்புகளை வளர்த்த அந்த நபர், இனி பாம்புகளை வைத்திருக்கக் கூடாதென அவருக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.