கவிஞர் வைரமுத்து மேல் 17 பெண்களுக்கு மேல் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – சின்மயி விமர்சனம்!

வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரபல பின்னணிப் பாடகி சின்மயி வலியுறுத்தியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டை பின்னணிப் பாடகி சின்மயி தொடர்ந்து கூறி வருகிறார். பல பெண்கள் வைரமுத்தால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தொடர்ந்து கூறி வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி ஆகியயோர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது டிவிட்டர் பதிவில், பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழும்போது, ஒவ்வொரு முறையும் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள். இந்தியா முழுவதும் இதுபோல் பெண்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் பக்கம் நிற்கிறீர்கள். இதுபோல், அரசியல் கட்சித் தலைவர்கள் பேசும்போது மாற்றம் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. ஆனாலும், பாலியல் சுரண்டல்கள், தொல்லைகள் குறைந்தபாடில்லை. போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் இருந்தும் அனைத்து துறையிலும் பாலியல் குற்றச்சாட்டு எழத்தான் செய்கிறது. குறிப்பாக திரைத்துறையில் இன்று பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

உங்கள் நண்பர் மற்றும் ஆதரவாளர் கவிஞர் வைரமுத்துவின் மீது 17க்கும் மேற்பட்ட பெண்கள் புகாரளித்தும், உங்கள் அருகாமையில் அவர் மகிழ்ச்சியுடன்தான் இருக்கிறார். இதனால் அவர் குறித்து மேலும் பெண்கள் பேச முடியாதவாறு செய்கிறார். தமிழகத்தில் வேறு அரசியல்வாதிகளே இல்லை என்பதுபோல் அவரை தொடர்ந்து உங்கள் கட்சி முன்னிலைப்படுத்துகிறது. கிட்டத்தட்ட தமிழ் திரைத்துறையில் 5 ஆண்டுகள் வேலை செய்ய தடையுடன், நகரின் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதற்காக போராடிக்கொண்டிருக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version