இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசின் கீழ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றால் 4 லட்சத்திற்கும் கீழ் மருத்துவ படிப்பின் கட்டணம் குறையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வின் மூலம் தகுதி பெற்ற மாணவர்களுக்கு உரிய மருத்துவ கல்வி வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ இடங்கள் விற்கப்படுவது, சமூகத்திற்கும் , நாட்டு நலனுக்கும் இழைக்கப்படும் அநீதி என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாத இடங்களை மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும், ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post