16-வது மக்களவையை கலைக்கும் பரிந்துரையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பிரதமர் மோடி வழங்கினார்.
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய அமைச்சரவையை அமைக்கும் பூர்வாங்க பணிகளில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது.
கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைக்க வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவை கூட்டம் நிறைவுபெற்ற பின்னர் குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவர் வழங்கினார்.
Discussion about this post