மத்திய அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதற்காக, மோடியுடன், அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதற்காக நேற்று 5 மணி நேரம் மோடியுடன் ஆலோசனை நடத்திய பாஜக தேசிய தலவைர் அமித் ஷா, கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் மீண்டும் பிரதமர் மோடியுடன், அமித் ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா இரண்டு அமைச்சர் பதவியும், அகாலிதள், அப்னே தாள் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் நலத்திட்டங்களை சரியாக கொண்டு சேர்க்காத அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதிய அமைச்சர்களை நியமிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.