சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான சாம் பிட்ரோடாவின் பேச்சு காங்கிரஸின் ஆணவத்தை காட்டுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சாம் பிட்ரோடாவிடம், 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக அரங்கேறிய கலவரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அது 1984-ல் நடந்தது, அதற்கு தற்போது என்ன என்று அலட்சியமாக பதில் கூறினார். அவரது இந்த அலட்சிய பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, சாம் பிட்ரோடாவின் பேச்சு காங்கிரஸின் ஆணவத்தை வெளிகாட்டுவதாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியின் மனநிலையை இந்த பேச்சு வெளிகாட்டுவதாக குறிப்பிட்ட மோடி, 1984 சீக்கிய கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் இத்தகைய ஆணவபோக்கு காரணமாக தான் கடந்த தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே அவர்கள் வென்றார்கள் என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.
Discussion about this post