உள்நாட்டு பொம்மை தயாரிப்பை மேம்படுத்தும் வகையில் “டாய்க்கேத்தான் 2021 – TOYCATHON” என்ற பெயரில் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில் கடந்த 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 3 நாட்கள் இணைய வழி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நாடு முழுதும் தேர்வு செய்யப்பட்ட கல்லூரிகளில் உச்சகட்ட விழா நடைபெறுகிறது.
இதில் கோவை குனியமுத்தூர் அருகிலுள்ள தனியார் கல்லூரியில் பிரதமர் பேசியபோது தமிழில் வணக்கம் தெரிவித்தார். பின்னர் அந்த கல்லூரி மாணவனர் ஒருவருடன் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கோவை மாணவர் ஆத்திக் முஹம்மது , தன்னுடைய திட்ட வரைவு குறித்து பிரதமரிடம் விளக்கினார். இதைக்கேட்ட பிரதமர், மாணவனுடைய கண்டுபிடிப்பு, மிகவும் நன்றாக உள்ளது சுவாரசியமாகவும் உள்ளது என பாராட்டினார்.
Discussion about this post