பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் அக்டோபர் மாதம் 12ம் தேதி வாரணாசியில் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் கிர்கிஸ்தானில் நடைப்பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே இருதலைவர்களும் வுவான் ஏரிக்கரையில் நடந்தபடியே சந்தித்து இருதரப்பு உறவுகள், பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்தியதை அடுத்து இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தியா-சீனா இடையிலான நட்பின் 70வது ஆண்டை கொண்டாடும் வகையில் இருநாட்டு உறவையும் மேம்படுத்த இருநாட்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர். கங்கை நதியில் படகில் சென்றபடியே இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
டோக்லாம் பகுதியில் சீனாவின் ராணுவ அத்துமீறல் விவகாரம் குறித்தும் இப்பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post