சி.பி.ஐ. அமைப்புக்கு புதிய இயக்குநரை நியமிப்பதற்காக தேர்வுக்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.
கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேர்வுக்குழுக் கூட்டத்தில், சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, சி.பி.ஐ. அமைப்பிற்கு நிரந்தர இயக்குநரை உடனடியாக நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில், சி.பி.ஐ.க்கு புதிய இயக்குநரை நியமிப்பதற்காக தேர்வுக்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
Discussion about this post