அடுத்த 6 மாதங்களுக்கான பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஜூன் மாதம் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கிர்கிஸ்தான் நாட்டிற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஜுன் 28, 29-ம் தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் பிரான்ஸ் நாட்டுக்கும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ரஷ்யாவுக்கும் செல்ல உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 3-வது வாரத்தில் நியூயார்க் செல்கிறார். அதேபோல நவம்பர் 4-ம் தேதி பாங்காங்க் செல்கிறார். நவம்பர் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்.