மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் அளிப்பது என்பது குறித்து பாஜக தலைவர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களை கைப்பற்றி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதன்படி, நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். 30ம் தேதி இரவு 7 மணி அளவில் குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இந்தநிலையில், அமைச்சரவையில் இடம் பெற உள்ளவர்களின் பட்டியலை இறுதி செய்யும் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர் அமித் ஷாவுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சரவையில் இடம் பெற உள்ளவர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவை இடம் அளிப்பது குறித்து மோடியும், அமித் ஷாவும் ஆலோசித்தனர்.