தேனி-ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம்

தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தேனி மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் இன்று பேசவுள்ளார்.

பிரதமர் மோடி கொச்சியில் இருந்து விமானம் மூலம் நேற்றிரவு மதுரை வந்தடைந்தார். அவரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஹெலிகாப்டர் மூலம் தேனி செல்ல உள்ள பிரதமர், அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், அதிமுக வேட்பாளர்கள் ரவீந்திரநாத் குமார், ராஜ்சத்யன், பாமக வேட்பாளர் ஜோதி முத்து ஆகியோரை ஆதரித்து பேச உள்ளார்.

இதனையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்கள் தமிழிசை, நயினார் நாகேந்திரன், எச்.ராஜா மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி மதுரை, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Exit mobile version