கடலூரில் தந்தை இறந்தது தெரிந்தும் ப்ளஸ் 2 மாணவி தேர்வு எழுத வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த பொம்மை வியாபாரி ஞானவேல் என்பவரின் மகள் கிரிஜா. இவர் ப்ளஸ் 2 படித்து வருகிறார். இது பொதுத்தேர்வு காலகட்டம் என்பதால் பரீட்சைக்கு தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது தந்தை ஞானவேல் நெஞ்சுவலி காரணமாக மரணம் எய்திய நிலையில், அதனை அறிந்தும் படிப்புதான் முக்கியம் என்று ப்ளஸ் 2 தேர்வினை தான் படித்து வந்த திருப்பாதிரிப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எழுதினார். அவரது சூழலை அறிந்த ஆசிரியர்களும் சக மாணவிகளும் அவருக்கு உறுதுணையாக இருந்து தேர்வினை எழுத உதவினர். இந்த சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி.. மனதை உருக்கும் சம்பவம்….!
-
By Web team
Related Content
விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
By
Web team
September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
By
Web team
September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்... நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
By
Web team
September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023