பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என விசாரிக்க அரசு தேர்வுகள் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் காட்டிலும் கூடுதலாக அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கியது அம்பலமாகியுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகலில் மதிப்பெண்கள் வழங்கிய விவரத்தை பதிவு செய்ததை காட்டிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு முடிவுக்கான மதிப்பின் பட்டியலில் கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கியது தெரியவந்துள்ளது. மெலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் கூடுதலாக 5 மதிப்பெண்கள் முதல் 7 மதிப்பெண்கள் வரை அதிகமாக வழங்கியது தெரியவந்துள்ளது.
எதனால் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகமாக வழங்கப்பட்டது என்பதை அரசு தேர்வுகள் துறை தெளிவுபடுத்தவேண்டும் என்றும் மாணவர்களுக்கு அதிகமாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால் கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் படிப்பு கலந்தாய்வில் அது தாக்கத்தை ஏற்படுத்தி மாணவர்களுக்கான வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் எனவும் கருத்துகள் கூறி வருகின்றனர்.
பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்துக் காட்ட இது போன்ற மதிப்பெண்கள் வாரி வழங்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.