விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டு பையனாக வரலாறு தெரியாமல் பேசி வருகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஆப்பரேசன் குறித்து திமுக அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர் என்றும் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிய முழு கருத்துக்கள் பின்வருமாறு உள்ளன.
சென்னையை அடுத்த புழல் பகுதியில் அதிமுக எம்ஜிஆர் மன்றம் சார்பில் எம்ஜிஆர் இலவச கணினி பயிற்சி மையம் மற்றும் இ சேவை மையத்தை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒன்றரை கோடி மதிப்பில் இலவச கணினி பயிற்சி மையம் மாதவரம் மூர்த்தி ஏற்பாட்டில் திறந்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவ மாணவிகள் கணினி திறன் பெற்று வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக உதவியாக இருக்கும் என தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியை விதி 356 யை பயன்படுத்தி டிஸ்மில் செய்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். டிஸ்மிஸ் ராசி திமுக விற்கு அதிகமாக உள்ளது. துரியோதனன் வீழ்ந்தது சகுனி, துட்சாதணனால் தான். அதுபோல திமுகவில் பல சகுனி, துட்சாதணன்கள் உள்ளனர் அவர்களால் திமுக அழிந்துவிடும் என விமர்சனம் செய்தார்.
ஓபிஎஸ் நேற்று மாலை ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, ஜூலை 1ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்தது குறித்து பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், மண் குதிரையை நம்பி ஆற்றில் இரங்கியவர்கள் நிலை என்ன ஆகும்? அதுபோல தான் ஓபிஎஸ் யை நம்பியவர்களின் நிலையும். அதிமுக ரயில் மாதிரி, அதன் என்ஜின் சென்று கொண்டே இருக்கிறது, ஓபிஎஸ் போன்ற தேவையில்லாத பெட்டிகளை கலற்றி விட்டுவிட்டோம். அதனால், நானும் இருக்கேனு காண்பித்துக்கொள்ள ஓபிஎஸ் செயல்படுகிறார் என விமர்சித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டு பையனாக வரலாறு தெரியாமல் பேசி வருகிறார் எனவும், அப்போது உதயநிதி ஸ்டாலினை விளையாட்டுத்துறை அமைச்சர் என கூறுவதற்கு பதில் துணை முதல்வர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வாய்தவறி கூறினார்.
திமுக அரசு 500 மதுக்கடைகளை மூடியது. அதில்
தமிழகத்தில் வருமானம் குறைவாக உள்ள கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் இல்லாத போது மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என கோசமிட்டனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு குறித்து வாய் திறக்கவில்லை என முதலமைச்சரையும், திமுகவையும் விமர்சனம் செய்தார்.
நடிகர் விஜய் அரசியல் பேச்சு குறித்து பேசிய அவர்,
யார் வேண்டுமானாலும் அரசியல் வாங்க, எவ்ளோ கஷ்டம், எவ்ளோ நெலிவு சுழிவுகள் இருக்குனு தெரிஞ்சிக்கோங்க என நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து முதல்வன் பட ரகுவரன் பாணீயில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்தார்.
மேலும், கடல் அரிப்பு உள்ள இடத்தில் பேனா சிலை வைப்பது முறையல்ல எனவும், அதனால், மக்களின் வரிப்பணம் வீணாகும் எனவும், திமுக அறக்கட்டளையில் இருந்து பணம் செலவு செய்து கலைஞர் கோட்டம் அமைத்தது போல, அறக்கட்டளையில் இருந்து பணம் எடுத்து அறிவாலயத்தில் வைக்கட்டும். கடலில் பேனா சிலை வைப்பதற்கு அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சட்டபூர்வமாக அதிமுக சார்பில் எதிர்கொள்வோம் என ஜெயகுமார் உறுதியளித்தார்.
செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சையில் வெளிப்படைத்தன்மைக்காக நேரு விளையாட்டு அரங்கிலா அறுவை சிகிச்சை செய்யமுடியும் என சுகாதாரத்துறை அமைச்சரின் கேள்விக்கு பதிலளித்த ஜெயகுமார், திமுக அமைச்சர்கள் மீது விரைவில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஆபரேசன் நடைபெற உள்ள கலக்கத்தில் உள்ளனர் என கூறினார்.