சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகைசெய்யும் திருத்த விதிகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இன்று கூடிய நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வானது இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்குமாறும் மேலும் வழக்கு ஜூன் 14 தள்ளிவைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
முக்கியமாக இந்த வழக்கினை வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் கே பாலு தொடர்ந்திருட்ந்தார். ப்குடியிருப்பு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இதை அனுமதித்தால், பொதுமக்கள் அமைதியாக வாழும் உரிமையை பாதிக்கச் செய்யும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுருந்தார்.
பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து தான் வழக்கு தொடர முடியும் என்று தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் குறிப்பிட்டுருந்தார்.
பொது இடங்கள் மட்டுமல்லாமல், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் வழங்கவும் தடை விதிக்க கோரியுள்ளோம். புதிய திருத்தம் தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்கிறோம் என்று மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ஆர். ஜோதிமணியன் குறிப்பிட்டுருந்தார்.