திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள் 5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
தாடிக்கொம்பு ரோட்டில் அமைந்துள்ள பிவி தாஸ் காலணியில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறை உதவியுடன் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.5 டன் எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கின் மொத்த மதிப்பு 5 லட்ச ரூபாய் வரை இருக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
Discussion about this post