வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு பகுதியில், கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் சேதமடைந்த மரங்கள் தற்போது பெய்து வரும் மழையினால் துளிர்விட தொடங்கியுள்ளன.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காட்டில், 27 ஹெக்டேர் நிலப்பரப்பில், சதுப்பு நிலக் காடுகள் அமைந்துள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தால், 400க்கும் மேற்பட்ட மரங்கள் நாசமாகின. தற்போது சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால், மரங்கள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. முன்பு இருந்ததைப் போன்று, பசுமை நிறைந்த வனப்பகுதியாக மாறி வரும் நிலையில், காடுகளிலுள்ள தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தியாகி வருகிறது.