திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலில் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு இலட்சத்திற்க்கும் மேற்பட்ட விதை பந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த வருடம் வீசிய கஜா புயலில் வீடுகள் உட்பட ஒரு கோடி மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் சிலர் தன்னார்வலர்கள் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஒரு லட்சம் விதை பந்துகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களை கொண்டு உருவாக்கிய விதை பந்துகளை மாணவர்கள் வாயிலாகவும், திருமண நிகழ்ச்சிகளில் பரிசு பொருளாகவும் கொடுத்து மாவட்டம் முழுவதும், முக்கியமாக கஜா புயல் பாதித்த பகுதிகளில் விதைக்கப்பட உள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.