வேலூர் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி 850 வாக்குச் சாவடிகளை வெப்கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜுலை 18ஆம் தேதிவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்களின் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர் பெயர்கள் அடங்கிய துணை வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார். வேலூர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 10 கம்பெனி துணை ராணுவம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 கம்பெனி துணை ராணுவ பாதுகாப்பை கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். ஆயிரத்து 553 வாக்குச் சாவடிகளில், 850 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும் என்றும், பதற்றமான 179 வாக்குப்பதிவு மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
Discussion about this post