தலைமைச் செயலக முதலமைச்சர் அலுவலகப் பிரிவு முதுநிலை தனிச் செயலாளர் தாமோதரன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தலைமைச் செயலக பொதுத் துறை முதலமைச்சர் அலுவலகப் பிரிவில் முதுநிலை தனிச் செயலராகப் பணியாற்றி வந்த தாமோதரன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் காலமான செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புப் பணியின் போது, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய தாமோதரனின் சேவை மகத்தானது என புகழாரம் சூட்டியுள்ளார். தாமோதரனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், தாமோதரனின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post