ரயில்வேத்துறையை தனியார் மயமாக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
ரயில்வேத்துறையின் 100 நாள் செயல் திட்டத்தில் 2 ரயில்களை இயக்கும் பணியை ஐ.ஆர்.சி.டி.சிக்கு வழங்கவும், 7 உற்பத்தி பிரிவுகள் மற்றும் பணிமனைகளை இந்தியன் ரயில்வே ரோலிங் ஸ்டாக் நிறுவனத்திற்கு வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதுகுறித்து மாநிலங்களவையில் சமாஜ்வாதி உறுப்பினர் சுரேந்திரநாத் நாகர் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், ராஜ்தானி, சதாப்தி ரயில்களை தனியார் மயமாக்கும் திட்டம் எல்லை தெரிவித்துள்ளார்.