கோவை ஆத்துப்பாலம் மின்மயானத்தில், சடலங்களை எரியூட்ட உறவினர்கள் எந்நேரமும் காத்திருப்பது, காண்போரை கண்கலங்கச் செய்கிறது.
கோவையில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.
இதனால் ஆத்துப்பாலம் மின்மயானத்தில், வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன.
வழக்கமாக நாளொன்றுக்கு 2 அல்லது 3 சடலங்கள் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது ஆம்புலன்சில் 5 சடலங்கள் வரும் அளவுக்கு நிலைமை எல்லை மீறிச் சென்றுவிட்டது.
சடலங்கள் எரிந்துகொண்டே இருப்பதால் அப்பகுதியில் கரும்புகை வீசுகிறது.
சடலங்களை எரிக்க உறவினர்களும் மின்மயானத்தில் குவிவதால், கொரோனா தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், சடலங்களுடன் கண்ணீரும் கவலையுமாக காத்திருக்கும் உறவினர்களை, காண்பதே கதிகலங்கச் செய்கிறது
Discussion about this post