பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டியில், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போன்று திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டியிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஆண்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டியை சிறப்பாக நடத்த விழா ஒருங்கிணைப்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, போட்டியில் பங்கேற்க இருக்கும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாடுபிடி வீரர்களுக்கு மூச்சுப் பயிற்சி, நீச்சல் பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதே போல் காளைகளுக்கு தவிடு, உளுந்து, சிவப்பு துவரை, பட்டாணி ஆகியவைகள் உணவாக வழங்கப்பட்டு வருகின்றன. தினமும் 15 காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
Discussion about this post