கோவை மாகாளியம்மன் ஆலய திருவிழாவில், ரத்தம் சொட்ட, சொட்ட கத்தி போட்டு, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மாகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக பக்தர்களால் கத்தி போடும் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பத்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக, இரத்தத்தை காணிக்கையாக அம்மனுக்கு செலுத்துகின்றனர்.
கோவை நெசவாளர் காலனியில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து மாகாளியம்மன் கோயில் வரை நடைபெற்ற திருவிழா ஊர்வலத்தில், பக்தர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் உடலை வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.
இதனால் ஏற்படும் வெட்டுக் காயங்களின் மீது 18மூலிகைகள் அடங்கிய பண்ணாரி பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Discussion about this post