கரூரில் நடைபெற்ற புறா போட்டிகளில் வெற்றி பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் புறா போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அதன் படி சாதா புறா போட்டி 19ம் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. கர்ணப்புறா போட்டி 23 ஆம் தேதி தொடங்கி 25 ம் தேதி வரை நடைபெற்றது. புறா போட்டிகளில் வென்ற புறா உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போட்டியில் வெற்றி பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகையை வழங்கினார். இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மோகன் என்பவருக்கு 25, ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
Discussion about this post