நாங்குநேரிக்கும் வேங்கைவயலுக்கும் போக மாட்டேன்! இங்கயே எதாவது போட்டோ ஷூட் பண்ணிக்கலாம்!

கடந்த 2022 டிசம்பர்ல தென்காசிக்கு போயிருந்தாரு முதலமைச்சர் ஸ்டாலின். அப்போ, தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் பக்கம், வினை தீர்த்தநாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கேட்டு 3ஆம் வகுப்பு மாணவி ஆராதனா எழுதுன கடிதத்துக்கு பதில் சொல்றதா, 35லட்சத்துல இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டப்படும்னு அறிவிச்சாரு… தன்னோட ட்விட்டர் பக்கத்துலயும், குழந்தைகளும் நம்பிக்கை வைத்துள்ள அரசுன்னு பெருமையோடு பணியதொடர்கிறேன்னும் சொல்லி விளம்பரப் படுத்தி இருந்தாரு…

200 ரூபா உபிஸும், நேருக்கு அப்புறமா குழந்தைகள் மாமா, மாமான்னு ஸ்டாலினத்தான் கூப்பிடுறதா புளகாங்கிதம் அடைஞ்சிருந்தாங்க. அதுக்கப்புறம் அப்பப்போ மாணவர்கள் கடிதம் போடுறதும் அதுக்கு ட்விட்டர்ல பதில் சொல்றதுமா வெற்று விளம்பரம் தேடிக்கிட்டே தான் இருந்தாரு ஸ்டாலின்…

சரி, இப்படி கடிதம் மட்டுமே போதாது… வேற ஏதாவது பெரிசா பிளான் பண்ணனும்னு, சென்னை ஆவடியில நரிக்குறவர் குடியிருப்புக்கு நேரடியா போய் அங்க ஒரு வீட்டுல மாணவிகளோட சேர்ந்து புத்தம் புது தட்டுல இட்லி எல்லாம் சாப்பிட்டு
பக்காவா ஒரு சூட்டிங் ஷெட்யூல முடிச்சாரு ஸ்டாலின்.

அவரு நெனைச்சமாதிரியே, இதுதாம்பா சமூக நீதி பேசுற திராவிட மாடல்னு 200 ரூபா உபிஸ் எல்லாம் சமூக வலைதளங்கள்ல பொங்கி பிரவாகம் எடுத்தாங்க…

இப்படியெல்லாம் மாணவர்களோட கோரிக்கை கடிதத்துக்கு பதில் சொல்றதா விளம்பரம் தேடுற முதலமைச்சர் ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அரசு பள்ளியில தலைமை ஆசிரியரால தன்னோட மகனுக்கு நடந்த சாதி துவேஷம் தொடர்பா மாணவனோட தாயார் போட்ட கடிதம் இதுவரைக்கும் ஒரு பதிலும் சொல்லலையாம்.

நாங்குநேரி சம்பவத்துலயும் கூட விடியா அரசு மாணவர்கள் நலன் தொடர்பா எந்த அறிவிப்பையும் வெளியிடல… பள்ளிகள்ள பரவுற சாதிய துவேஷத்தை நிறுத்துறதுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கலன்னு அதிருப்தி தெரிவிக்கிறாங்க கல்வியாளர்கள்.

இப்போ, சுதந்திரதின விழாவுலயும், 3ஆம் வகுப்பு மாணவன் ஒருத்தன வரவழைச்சிட்டு கண்டுக்கிடவே இல்லையாம் முதலமைச்சர் ஸ்டாலின்.

ராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் கிராமத்த சேர்ந்த எட்டு வயது மாணவர் லிதர்சன், மூணாம் வகுப்பு படிச்சிட்டு வாராரு. சுதந்திரதினத்தன்னைக்கு கோட்டை கொத்தளத்துல முதலமைச்சர் கொடியேத்துறத பார்க்கணும்னு கடிதம் போட்ட லிதர்சனையும், அவரது தாயாரையும் சிறப்பு விருந்தினரா அழைச்சிருக்காங்க. ஆனா, விருந்தினர் பகுதியில இருக்கை இல்லாததால, லிதர்சனையும் அவங்க அம்மாவையும், கடைசி இருக்கையில கொண்டு போய் உக்கார வச்சிருக்காங்க. கடைசியில இருந்ததால பார்க்கிறதுக்கு ஒண்ணுமே தெரியலன்னு மாணவனோட முகம் சோகமா மாறியிருக்கு. சிறுவன் அழுவுற நிலைக்கு போனத பார்த்த அங்க இருந்த பத்திரிகையாளர்கள் தங்களுக்கான இருக்கையில முன்வரிசையில தாயையும் மகனையும் அமர வச்சிருக்காங்க. அதுக்குப் பிறகுதான் மாணவன், கோட்டை கொத்தளத்துல மூவர்ணக்கொடி பறந்தத ரசிச்சி பார்த்துருக்கான்.

நாங்க மாணவர்கள வரவச்சோம்னு விளம்பரத்துக்காக வரவைக்க வேண்டியது… அதுக்குப்பிறகு கண்டுக்கிடாம விட்டுர்றது… மாணவர்கள வச்சி இப்படி வீண் விளம்பரம் தேடுறது எல்லாம் தேவையா முதல்வர் சார்?

Exit mobile version