சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் 39 காசுகளும் குறைந்து விற்பனையாகிறது.
சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் குறைந்து லிட்டருக்கு 74 ரூபாய் 63 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 39 காசுகள் குறைந்து லிட்டருக்கு 70 ரூபாய் 38 காசுகளாக உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் 90 ரூபாயையும், டீசல் 80 ரூபாயையும் எட்டி மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு படிப்படியாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை இதுவரை 12 மற்றும் 10 ரூபாய் என்ற அளவு வரை குறைந்து காணப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 86 ரூபாய் வரை உயர்ந்து பின்னர் படிப்படியாக குறைந்து தற்போது 63 ரூபாய் என்ற வீதத்தில் உள்ளதே ஆகும். அதேபோல் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் 74 ரூபாய் வரை உயர்ந்து தற்போது 60 ரூபாய் என்ற கணக்கில் உள்ளது.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவதும் ரிசர்வ் வங்கி இருப்புக்கு பாதகத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.