சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 6-வது நாளாக குறைவு

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 6-வது நாளாக சற்று குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களாக சற்று விலை குறைந்து வருகிறது.

சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து 84 ரூபாய் 11 காசுகளாகவும், டீசல் விலை 7 காசுகள் குறைந்து 79 ரூபாய் 15 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆறு நாட்களில் பெட்ரோல் விலை 1 ரூபாய் 57 காசுகளும், டீசல் விலை 89 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

Exit mobile version