கச்சா எண்ணை விலை குறைந்தும் டீசல் பெட்ரோல் விலை குறையவில்லை! நிபுணர்கள் குற்றச்சாட்டு!

100 டாலருக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெயின் விலை, கடந்த ஒரு மாதமாக பாரல் 80 டாலருக்கு கீழ் குறைந்து விற்பனை செய்யப்படும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஓராண்டாக குறைக்கப்படாமலே இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை போன்ற எரிவாயு பொருள்களின் விலை அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. எரிவாயு உருளையின் விலை மட்டும் மாதத்தின் முதல் நாளில் மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஓர் ஆண்டாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகின்றன. கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி பெட்ரோல் டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டது. சென்னையில் ஒரு லிட்டர் 102 ரூபாய்க்கும், டீசல் 94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அப்பொழுது ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கு மேல் இருந்தது.

ஆனால் கடந்த ஒரு மாதமாக கச்சா எண்ணையின் விலை பாரல் 80 டாலருக்கு கீழ் குறைந்து நிலை கொண்டு உள்ளது. இன்றைய நிலவரப்படி பாரல் 74 டாலர் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 80 ரூபாய்கும் கீழ் கடந்த ஒரு மாதமாக கச்சா எண்ணையின் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் இன் விலை கடந்த ஓராண்டாக எண்ணெய் நிறுவனங்கள் குறைக்காமல் உள்ளது. இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை கடந்த ஓராண்டில் 25 டாலர் வரையில் குறைந்துள்ளதாகவும், மேலும் இதை விட குறைந்த விலைக்கு ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கச்சா எண்ணெய் விலை கடந்த ஓராண்டில் 25 டாலர் வரையில் குறைந்துள்ள போதிலும், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் லுக்காண மத்திய அரசின் வரி ஐந்து ரூபாயில் வரையில் குறைக்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் மாநில அரசு தங்களுக்கான வாட் வரியை ஒரு ரூபாய் கூட குறைக்காமல், இருபத்தைந்து ரூபாயை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூல் செய்வதும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் என்றும் பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனினும் ஜூலை மாத தொடக்கத்தில் பெட்ரோல் டீசல் விலை சிறிதளவு குறைய வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Exit mobile version