பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, ஆவுடையார்பட்டு கிராமத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறால் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ஸ்ரீதர் என்பவர் வினோத்குமார் என்பவரிடம் 14 லட்ச ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. நீண்ட நாளாகியும் ஸ்ரீதர் பணத்தை கொடுக்காததால் ஆத்திரமடைந்த வினோத்குமார், இரவு நேரத்தில் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார். சம்பவம் குறித்து வினோத்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Exit mobile version