தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல் ,டீசல் விலை

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் 26 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 76 ரூபாய் 19 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு 80 ரூபாய் 26 காசுகளாகவும்,டீசல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு 76 ரூபாய் 19 காசுகளாகவும் உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதையொட்டி கடந்த 2 வாரங்களுக்கு மேல் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து குறைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version