சென்னையில் 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைவு !

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை பதிமூன்றாவது நாளாக சற்று குறைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த 12 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து வருகிறது. 13-வது நாளாக இன்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் குறைந்து 82 ரூபாய் 65 காசுகளுக்கும், டீசல் விலை 8 காசுகள் குறைந்து 78 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.13 நாட்களில் பெட்ரோல் விலை 3 ரூபாய் 45 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 4 காசுகளும் குறைந்துள்ளது.

Exit mobile version