தொடர்ந்து சரிந்து வரும் பெட்ரோல்,டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து 81 ரூபாய் 61 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 21 காசுகள் குறைந்து 77 ரூபாய் 34 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றை விலையில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து 81 ரூபாய் 61 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 21 காசுகள் குறைந்து 77 ரூபாய் 34 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை, கடந்த சில வாரங்களை சரிந்து வருவது வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version