பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைவு

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 74 ரூபாய் 94 காசுகளாகவும், டீசல் 70 ரூபாய் 77 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் குறைந்து 74 ரூபாய் 94 காசுகளுக்கும், டீசல் விலை 35 காசுகள் குறைந்து, 70 ரூபாய் 77 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version