வெளிநாடு சென்று காணாமல் போன கணவரை மீட்டுத்தரக்கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மற்றும் மகள் மனு அளித்தனர்.
துறையூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆடு மேய்க்கும் பணிக்காக சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். இதனிடையே அவர் பணிக்குச் சென்று 6 மாதத்திற்குப் பின், எந்தவொரு அலைபேசி அழைப்பும் இல்லை என்றும், வேலைக்கு அனுப்பி வைத்தவர்களிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது. இதையடுத்து முருகேசனின் மனைவி முருகேஸ்வரி மற்றும் அவரது மகள் புவனேஸ்வரி ஆகியோர், முருகேசனை மீட்டுத்தரக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.
Discussion about this post