ஈரோடு மாநகராட்சி ஆணையரும் கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமாரிடம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக அமுல்படுத்த கோரி, மனு அளிக்கப்பட்டது. பின்னர் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வகுமார சின்னையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஆளுங்கட்சி ஆராஜகம் குறித்த தகவல் வந்துள்ளதாகவும், தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டுகள் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் 518 ஓட்டுகள் உள்ள ரயில்வே காலனியில் 90 பேர்தான் இருக்கின்றனர் என்றும், ஆளும்கட்சியினர் வாக்காளர்களின் சான்றுகளை பெற்று கள்ள ஓட்டு போட இருப்பதாக குற்றச்சாட்டினார்.
Discussion about this post