அனிமெல் பெட் தெரியும் அது என்ன “Human pet”.. மனிதனை வளர்ப்புப்பிராணியாக வைத்திருந்தவர் யார்?

வைல்ட் பாய் என்று அழைக்கப்படும் நபர் தான் பீட்டர். இவரை 1725 ஆம் ஆண்டில் ஜெர்மனிய காட்டுப்பகுதியில் உடலில் துணியில்லாமல் கண்டெடுத்துள்ளனர். அப்போது அவருக்கு வயது வெறும் பதினொன்றுதான். அவரது பெற்றோர்கள் அவரை கைவிட்டு விட்டார்கள் என்றும் அவரை வளர்க்க யாரும் முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இவரது உண்மையானப் பெயர் யாருக்கும் தெரியாததால் இவரை பீட்டர் என்று அனைவரும் அழைத்து வந்தனர். இவருக்கு உடைகள் போடுவதற்கு தந்தாலும் அவர் அதனை உடுத்துவதை விரும்பாமல் இருந்து வந்துள்ளார். இவருக்கு பன்னிரெண்டு வயதாகும்போது இலண்டனின் மன்னர் முதலாம் ஜார்ஜ் இவரை தனது வளர்ப்புப் பிராணியாக வாங்கிக்கொண்டார். அதிலிருந்து மக்களால் பீட்டர் த வைல்ட் பாய் என்று அழைக்கப்பட்டார்.  இதில் ஒரு சுவாரசியமான விசயம் என்னவென்றால் விலங்குகளுக்கு அணிவிக்கும் கழுத்துப்பட்டை போலவே இவருக்கும் வளர்ப்புப்பிராணிக்கான கழுத்துப்பட்டை ஒன்றினை அணிவித்துள்ளனர். இவர் 1795 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

Exit mobile version