புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் ஈடுபாடு உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் ஒப்புக்கொண்டுள்ளார்.
புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பர்வேஷ் முஷாரப், புல்வாமா தாக்குதல் சம்பவம் மிகவும் வேதனையானது என்று கூறியுள்ளார். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் ஆசருக்கு கருணை காட்டக்கூடாது என்று முஷாரப் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அரசுக்கு இந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதாக கூறுவதை தாம் நம்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post