மதுரையில் உள்ள 17 வீரத் தியாகிகளின் நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
1920ம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது ஆங்கிலேயர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். வீர தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் தியாகிகளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த கழக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் பெருங்காமநல்லூரில் உள்ள நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான், முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.சரவணன், மருத்துவர் சரவணன், எஸ்.டி.கே. ஜக்கையன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.