தேனி மாவட்டம் முல்லை பெரியார் அணையின் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு மழை துவங்கும் நிலையில், அணையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அண்மையில், பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்ச நீதிமன்றம் மூவர் குழு நியமித்து அவர்களுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவிட்டிருந்தது.
அதன்படி மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் துணை கண்காணிப்பு குழுவினர் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு செய்து வருகின்றனர். அணையின் நீர்மட்டம் 125.60 அடியாக உள்ள நிலையில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்த குழு அதிகாரிகள், பெரியார் மெயின் அணை, பேபி அணை, கேலரி பகுதி, மதகுப்பகுதி மற்றும் நீர்வரத்து, நீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் ஆய்வுகள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு மூவர் குழுவிடம் சமர்பிக்கப்பட உள்ளது.
Discussion about this post