சென்னை பெரம்பூர்..ரூ.68 லட்சம் பறிமுதல்..ஹவாலா பணமா?

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 68 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திராவில் இருந்து பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு விரைவு ரயில் வந்தது. அப்போது ரயிலில் இருந்து இறங்கிய 2 பயணிகள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுக்கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை ரயில்வே போலீசார் ஆய்வு செய்த போது, அதில் 68 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அதனை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்து, பணத்தை கொண்டு வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Exit mobile version