பெரம்பலூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்த திமுகவினரின் சதி செயல் பொதுமக்களால் முறியடிக்கப்பட்டது.
ஆலத்தூர் அருகே கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த வித்யா இளையராஜாவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த சண்முகமும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் அலுவலத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் எவ்வித காரணமின்றி எடுத்து செல்லப்பட்டது. இதனைக் கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் வித்யாஇளையராஜா மற்றும் பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில், திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகம் காவல்துறையினரின் பாதுகாப்போடு, ஊராட்சி மன்ற தலைவர் வித்யா இளையராஜாவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்தார்.
இதனையறிந்த அப்பகுதி மக்கள் சண்முகத்தின் செயலை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்காததால் திமுகவினரின் சதி செயல் முறியடிக்கப்பட்டது.
மேற்கண்ட செய்தியை பொதுமக்கள் பேட்டியுடன் சேர்த்து விளக்கமாக காட்சிப்பதிவு வடிவமைப்பில் காண கீழே உள்ள YOUTUBE-பிரிவில் உள்நுழையுங்கள்
??⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬??
Discussion about this post