கேரளாவில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில், நிபா தாக்கத்தை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைத்து, நோயாளிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், இது குறித்து ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்திய மருத்துவக் குழு கேரள மாநிலம் சென்றுள்ளது. பொதுமக்கள் மத்தியில் நிபா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய் தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு முடுக்கி விட்டுள்ளது.
Discussion about this post