வீடுகளை இழந்து வாடும் பொதுமக்கள்! பல ஆண்டுகளாக காக்க வைக்கும் விடியா அரசு!

சென்னை கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விடியா அரசு மீது அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்…

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அபிராமபுரம் கோவிந்தசாமி நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு சுமார் 350 குடும்பங்கள் வசித்து வந்தனர். இங்குள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியபோது, அதைக் கண்டித்து கண்ணையன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார்.

வீடுகளை இழந்தவர்களுக்கு துரைப்பாக்கம், கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் தருவதாக விடியா அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடினர். இதையடுத்து மயிலாப்பூர் பகுதியிலேயே வீடுகள் வழங்குவதாக விடியா அரசு அறிவித்தது. இதை நம்பி மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், 240 குடும்பங்களுக்கு மட்டுமே தேனாம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 108 குடும்பங்களுக்கு இதுவரை விடியா திமுக அரசின் நிர்வாகம் வீடுகள் வழங்கவில்லை. இதனால் வீடுகளை இழந்து தவித்து வரும் அப்பாவி மக்கள் வாடகை வீடுகளில் பல ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து வசித்து வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் இடிக்கப்பட்ட கட்டடங்கள் அரைகுறையாக இடிக்கப்பட்டுள்ளன. தற்போது அந்தப் பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. அப்பகுதி முழுவதும் தெருவிளக்குகள் போடப்படாமல் இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் விடியா அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இப்பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சீரமைக்கும் வகையில், இப்பகுதியில் கூவம் ஆற்றுக் கால்வாயை முறையாக சுத்தப்படுத்தி தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடுகளை இழந்து தவித்து வரும் கோவிந்தசாமி நகர் பகுதி வாசிகளுக்கு அளித்த வாக்குறுதியின்படி வீடுகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

Exit mobile version