தாளாவாடி அடுத்த திம்பம் மலைப்பகுதியில் இருந்து பார்க்கும் போது ஒரு பகுதியில் மட்டும் மழை பெய்து கொண்டிருந்தது, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள திம்பம் மலையானது சின்ன ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரத்து 105 மீட்டர் உயரத்தில் இந்த மலை உள்ளது. இதன் உச்சியில் நின்று நிலப்பரபை காணும் போது, ஒரு விதமான குளிர்ச்சியோடு கூடிய சூழல் நிலவும். மேலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையாகவும், பவானிசாகர் அணையின் அழகும் தெரியும்.
இந்த நிலையில், நேற்று இந்த திம்பம் மலைப்பாதையின் கொண்டை ஊசி வளைவில் நின்று பார்த்த போது வனப்பகுதியின் ஒரு பகுதியில் மட்டும் மழை கொட்டியது. ஒருபுறம் வெயிலும், மறுபுறம் மழையும் பெய்த காட்சி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.